உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  முதல்வர் பதவி முக்கியமில்லை: சிவகுமார் திடீர் தத்துவம்

 முதல்வர் பதவி முக்கியமில்லை: சிவகுமார் திடீர் தத்துவம்

பெங்களூரு: “எனக்கு முதல்வர் பதவி முக்கியமில்லை,” என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்துள்ளார். பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, கட்சியின் மூத்த தலைவர். வரும் 2028 சட்டசபை தேர்தலில், கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவது பற்றி அவருடன் விவாதித்தேன். நாங்கள் நெருங்கிய நண்பர்கள். எங்களுக்குள் நல்ல உறவு உள்ளது. அமைச்சரவையில் பணியாற்றி வருகிறோம். அவர் கட்சியின் சொத்து. எனக்கு எந்த பிரிவும் இல்லை. என்னுடைய எண் 140. இந்த கட்சி, கூட்டு தலைமையின் கீழ் கட்டமைக்கப்பட்டுள்ளது. கட்சியில் தனிப்பட்ட பிரச்னை இல்லை. எனக்கு முதல்வர் பதவி முக்கியம் இல்லை. கட்சியில் உள்ள அனைவருடன் இணைந்து பணியாற்றி, மீண்டும் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வருவது முக்கியம். எம்.எல்.ஏ.,க்கள், மேலிட தலைவர்களை சந்திக்க சென்றது பற்றி எனக்கு தெரியாது. அமைச்சரவை மாற்றத்தின்போது எம்.எல்.ஏ.,க்கள் பலர் அமைச்சராக விரும்புகின்றனர். அதனால் டில்லி செல்கின்றனர். இதில் தவறு இல்லை. முதல்வர் பதவி, அமைச்சரவை மாற்றம் குறித்து சோனியா, ராகுல், கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அமர்ந்து பேசி சரியான முடிவு எடுப்பர். நான் கூட்டு தலைமையை நம்பும் நபர். ஆறு ஆண்டுகளாக கட்சி தலைவராக உள்ளேன். எனக்கு கட்சி வழிபாடு உள்ளது. தனிப்பட்ட வழிபாடு இல்லை. பா.ஜ., மற்றும் ம.ஜ.த., தலைவர்கள், எங்களை பற்றி பேச வேண்டாம். அவர்கள் தங்கள் கட்சியை கவனித்துக் கொள்ள வேண்டும். நான் உண்மையான காங்கிரஸ்காரன். டில்லி சென்றால் உங்களிடம் (ஊடகத்தினர்) கூறி விட்டுச் செல்வேன். ஒக்கலிக சமூகத்திற்கு நான் தலைவன் என்று எப்போதும் சொன்னதே இல்லை. ஒக்கலிகராக பிறந்தேன். நான் இறந்தாலும் மதமும், ஜாதியும் நம்மை விட்டு விலகாது. ஒக்கலிக தலைவர் என்ற பட்டத்தை, எதிர்க்கட்சி தலைவர் அசோக் எடுத்துக் கொள்ளட்டும். அவருக்கு ஏற்கனவே சக்ரவர்த்தி, சாம்ராட் பட்டங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். சிவகுமாருக்கு ஆதரவு அரசியல் நிகழ்வுகளை கவனித்து வருகிறேன். துணை முதல்வர் சிவகுமார் எங்கள் சமூகத்தை சேர்ந்தவர். இரண்டரை ஆண்டுகளுக்கு பின், அவர் முதல்வர் ஆவார் என்று நினைத்துள்ளோம். அவர் கட்சியின் ஒழுக்கமான சிப்பாய். எங்கள் மடத்திற்கு வரும் பக்தர்கள், சிவகுமார் முதல்வராக வேண்டும் என்று விரும்புகின்றனர். கட்சிக்காக பல கஷ்டங்களை சந்தித்துள்ளார். அவரை முதல்வராக்கி, அவரது தொலைநோக்கு பார்வையை பயன்படுத்தி, மாநிலத்தை மேம்படுத்த வேண்டும். - நிர்மலானந்த நாத சுவாமி ஒக்கலிக சமூகத்தின் மடாதிபதி, ஆதிசுஞ்சனகிரி மடம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை