உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சிறுவர்களை ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய எஸ்.ஐ., கைது

 சிறுவர்களை ஓரினச்சேர்க்கைக்கு கட்டாயப்படுத்திய எஸ்.ஐ., கைது

பெங்களூரு: கொலை வழக்கில் விசாரணைக்கு அழைத்து சென்று, இரண்டு சிறுவர்களை பாலியல்ரீதியாக துன்புறுத்திய, எஸ்.ஐ., கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு கொத்தனுாரில் உள்ள லாட்ஜில், இரண்டு சிறுவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் வீடியோ, கடந்த 28ம் தேதி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து, கொத்தனுார் போலீசார் விசாரித்த போது, சிறுவர்களை ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும்படி, அம்ருதஹள்ளி போலீஸ் நிலைய எஸ்.ஐ., பிரவீன் கட்டாயப்படுத்தியது தெரிய வந்தது. அவர் மீது போக்சோ வழக்குப்பதிவானது. நேற்று முன்தினம் இரவு அவர் கைது செய்யப்பட்டார். அவரை மூன்று நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கின்றனர். கடந்த ஆண்டு அம்ருதஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கு தொடர்பாக, வீடியோவில் இருக்கும் இரண்டு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லாமல், லாட்ஜிற்கு அழைத்து சென்ற பிரவீன், ஆடைகளை களைந்து ஓரினசேர்க்கையில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். மேலும், அதை வீடியோவாக எடுத்து உள்ளார். தற்போது அவரது மொபைலில் இருந்த வீடியோ கசிந்ததால், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரவீனுக்கு உதவியாக இருந்த கான்ஸ்டபிள் ராகவேந்திரா என்பவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை