உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கோவில் உண்டியல் திறப்பு

 கோவில் உண்டியல் திறப்பு

கோலார்: கோலாரின் வேம்கல் அருகே சேத்தி மலையில் அமைந்துள்ள, கர்நாடக அரசின் ஹிந்து அறநிலையத் துறையின் பாதேஸ்வரர் பைரேஸ்வரர் கோவிலின் உண்டியலில், 24.74 லட்சம் ரூபாய் இருந்தது. பாதேஸ்வரர் பைரேஸ்வரர் கோவிலின் உண்டியலில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எண்ணுவது வழக்கம். அதன்படி, நேற்று கோவிலின் உண்டியல், கோலார் தாசில்தார் சீனிவாஸ், கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் சுப்ரமணி முன்னிலையில் திறக்கப்பட்டது. உண்டியலில் இருந்த பணத்தை, வருவாய் துறை அதிகாரிகள், வங்கி ஊழியர்கள் எண்ணினர். இதில், 24 லட்சத்து, 74 ஆயிரத்து 920 ரூபாய் இருந்தது. இந்த தொகையை, மத்தேரி கிளை கனரா வங்கியில், கோவிலின் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ