உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்

 மெட்ரோ ரயிலில் பயணித்த இதயம்

பெங்களூரு: உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்காக, பெங்களூரின் ராகிகுட்டாவில் இருந்து பொம்மசந்திராவுக்கு மெட்ரோ ரயிலில் மனித இதயம் பத்திரமாக கொண்டு செல்லப்பட்டது. பெங்களூரில் நிலவும் போக்குவரத்து நெரிசலால், அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்சில் செல்வோர் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. அதிலும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக, உடல் உறுப்புகளை எடுத்துச் செல்வது பெரும் சவாலாக உள்ளது. இதனால், அவசர தேவைக்காக உடல் உறுப்புகளை கொண்டு செல்வதற்கு மெட்ரோ ரயில் வரப்பிரசாதமாக அமைந்து வருகிறது. பொம்மசந்திரா நாராயணா ஹெல்த் சிட்டியில் சிகிச்சை பெறும் நோயாளி ஒருவருக்கு, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இதயம் தேவைப்பட்டது. ஜே.பி., நகரில் உள்ள ஆஸ்டர் ஆர்.வி., மருத்துவமனையில் இருந்து, இதயத்தை கொண்டு செல்ல வேண்டி இருந்தது. நேற்று முன்தினம் இரவு ஆஸ்டர் மருத்துவமனையின் 6 பேர் கொண்ட மருத்து குழுவினர்,குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட இதயத்துடன்,ராகிகுட்டா மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து இரவு 7:32 மணிக்கு மெட்ரோ ரயிலில் புறப்பட்டனர். இவர்கள், பொம்மசந்திரா மெட்ரோ ரயில் நிலையத்தை இரவு 7:39 மணிக்கு அடைந்தனர். வெறும் ஏழு நிமிடங்களில் இதயம் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. அங்கிருந்து, இதயம் ஆம்புலன்ஸ்க்கு மாற்றப்பட்டு, இரவு 8:12 மணிக்கு நாராயணா ஹெல்த் சிட்டியில் ஒப்படைக்கப்பட்டது. அங்கு தயாராக இருந்த மருத்துவர்கள், நோயாளிக்கு அதை பொருத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை