உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / உபேந்திரா மொபைல் போனை ஹேக் செய்தவர் கண்டுபிடிப்பு

உபேந்திரா மொபைல் போனை ஹேக் செய்தவர் கண்டுபிடிப்பு

பெங்களூரு: நடிகர் உபேந்திரா மற்றும் அவரது மனைவி பிரியங்காவின் மொபைல் போன்களை 'ஹேக்' செய்தவர்கள், பீஹாரில் இருப்பதை சைபர் குற்றப்பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு நடிகர் உபேந்திரா மற்றும் அவரது மனைவி பிரியங்காவின் மொபைல் போன்கள் 'ஹேக்' செய்யப்பட்டன. இருவரின் மொபைல் போன்களின் தொடர்பு எண்களுக்கு மெசேஜ் அனுப்பி, பணம் கேட்டுள்ளனர். உபேந்திரா, பிரியங்காவின் மொபைல் போனில் இருந்த வங்கிக் கணக்கு விபரங்களை திருடி, 1.65 லட்சம் ரூபாயை பரிமாற்றம் செய்து கொண்டனர். இதுதொடர்பாக, பெங்களூரின் சைபர் கிரைம் போலீசாரிடம், தம்பதி புகார் செய்தனர். 'தங்களின் பெயரில் யாராவது பணம் கேட்டால், நம்ப வேண்டாம்' என, நண்பர்கள், அறிமுகம் உள்ளவர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். போலீசாரும் விசாரணை நடத்தியபோது, ஹேக்கர்கள் பீஹாரை சேர்ந்தவர்கள் என்பதை கண்டுபிடித்துள்ளனர். இவர்களை பிடிக்க சிறப்பு குழு அமைத்து, பீஹாருக்கு செல்லும்படி பெங்களுரு மத்திய மண்டல டி.சி.பி., அக்ஷய் மசீந்திரா உத்தரவிட்டுள்ளார். இதன்படி போலீசார், பீஹார் செல்ல தயாராகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை