உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  திருடப்பட்ட மூன்று பைக்குகள் மல்லப்பிரபா ஆற்றில் மீட்பு

 திருடப்பட்ட மூன்று பைக்குகள் மல்லப்பிரபா ஆற்றில் மீட்பு

பெலகாவி: சில மாதங்களுக்கு முன், காணாமல் போன மூன்று பைக்குகள் மல்லப்பிரபா ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டன. பெலகாவி மாவட்டம், பைலஹொங்களா தாலுகாவின், நயாநகர் புற நகரில் மல்லப்பிரபா ஆறு பாய்கிறது. நேற்று காலை ஆற்றங்கரையில், சிலர் நடை பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கரையில் பைக் ஒன்று விழுந்து கிடந்தது. இதை பார்த்த அவர்கள், ஆற்றில் யாராவது பாலத்தில் இருந்து பைக்குடன் குதித்து, தற்கொலை செய்திருக்கலாம் என, சந்தேகித்தனர். ஆற்றில் குதித்து தேடிய போது, அடுத்தடுத்து இரண்டு பைக்குகள் கிடந்தன. ஆற்றில் பைக்குகள் எப்படி வந்தன என, ஆச்சரியமடைந்த அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.௸ இதை யடுத்து அங்கு வந்த போலீசார், பைக்குகளை நீரில் இருந்த மூன்று பைக்குகளை, போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று, பதிவு எண்களை வைத்து ஆய்வு செய்தபோது, அவை திருட்டு போன பைக்குகள் என்பது தெரிந்தது. பெலகாவி, சவதத்தியில் உள்ள தங்க நகைக்கடைக்கு, 2025ன் டிசம்பர் 22ம் தேதியன்று, ஒன்பது மர்ம நபர்கள், மூன்று திருட்டு பைக்குகளில் வந்து 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். கொள்ளையடித்த பின், 25 கி.மீ., தொலைவில் உள்ள மல்லப்பிரபா ஆற்றில், பைக்குகளை வீசிவிட்டு நகைகளுடன் தப்பியோடினர். இந்த பைக்குகள் தான், நேற்று ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டன. பைக்குகள் காணாமல் போனது குறித்து, உரிமையாளர்கள் ஏற்கனவே புகார் அளித்திருந்தனர். தற்போது அவர்களிடம் பைக்குகளை ஒப்படைக்க, போலீசார் ஏற்பாடு செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை