உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  சட்டசபை கூட்டத்தொடர் பெலகாவியில் பலத்த பாதுகாப்பு

 சட்டசபை கூட்டத்தொடர் பெலகாவியில் பலத்த பாதுகாப்பு

பெலகாவி: குளிர்கால சட்டசபை கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில், பெலகாவியில் 6,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். தலைநகர் புதுடில்லியில் கடந்த மாதம் நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தால், பெலகாவியில் நடக்க உள்ள குளிர்கால சட்டசபை கூட்டத்தொடருக்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சுவர்ண விதான் சவுதாவில் வரும் 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை, சட்டசபை கூட்டத்தொடர் நடக்கிறது. இதற்காக, வழக்கத்தை விட பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இது குறித்து, பெலகாவி நகர போலீஸ் கமிஷனர் போர்ஸ் பூஷண் கூறியதாவது: சட்டசபை கூட்டத்தொடர் அமைதியாக நடப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சுவர்ண விதான் சவுதாவை சுற்றி, 3 கி.மீ., சுற்றளவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. 6,000க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் உள்ளனர். 6 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட 16 அதிகாரிகள் பாதுகாப்பை மேற்பார்வையிடுகின்றனர். ட்ரோன்கள், மோப்ப நாய்கள், பாம் ஸ்குவாடு ஆகியவை பயன்படுத்தபடும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை