உள்ளூர் செய்திகள்

 இன்று இனிதாக

ஆன்மிகம் கும்பாபிஷேகம்  ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழாவை ஒட்டி, தீர்த்த சங்கராஹனம், யாக அலங்காரம், அக்னி சங்கராஹனம் - காலை 8:30 முதல் மதியம் 12:00 மணி வரை; அங்குரார்ப்பனம், ரக் ஷா பந்தன், கும்ப அலங்காரம், கும்ப ஸ்தாபனம், யாக பூஜை ஹோமம், அக்னி விபஜனம், பூர்ணாஹூதி, தீபாராதனை - மாலை 5:30 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், கிரங்கூர் போஸ்ட், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா. லேசர் ஷோ  அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி  தோட்டக்கலை துறை சார்பில் மாம்பழம், பலாப்பழம் கண்காட்சி - காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: லால்பாக் தாவரவியல் பூங்கா, பெங்களூரு. யோகா  வாழும் கலை அமைப்பு சார்பில் யோகா, தியானம், சுவாச பயிற்சி - காலை 6:00 முதல் 8:30 மணி வரை மற்றும் மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: வாழும் கலை ஆசிரமம், லலிதாத்ரிபுரா சாலை, மைசூரு. தொடர்புக்கு: 94804 76825.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை