மேலும் செய்திகள்
இன்று இனிதாக ....
30-Jul-2026
ஆன்மிகம் குரு பூர்ணிமா வாழும் கலை அமைப்பு சார்பில் குரு பூர்ணிமாவை ஒட்டி, யோகா, பிரணாயாமம், தியானம், சுதர்சன கிரியா - காலை 6:00 முதல் 8:30 மணி வரை மற்றும் மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: வாழும் கலை வளாகம், லலிதாத்ரிபுரா சாலை, மைசூரு. தொடர்புக்கு 94808 76825, 94835 89825. சுமங்கலி பூஜை ஆடி மூன்றாவது வார வெள்ளிக்கிழமையை ஒட்டி சுமங்கலி பூஜை - மாலை 5:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: தங்கமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், தொட்டண்ணா நகர், காவல் பைரசந்திரா. மண்டல பூஜை ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முடிந்ததை ஒட்டி, மண்டல பூஜை - காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரையிலும்; மாலை 5:00 முதல் இரவு 8:00 மணி வரையிலும்; ஹோமம் - காலை 10:00 முதல் 11:00 மணி வரை; அபிஷேகம் - 11:00 முதல் மதியம் 12:00 மணி வரை; ஆரத்தி - மதியம் 12:30 மணி. இடம்: ஸ்ரீ சமயபுரம் மஹா மாரியம்மன் கோவில், பாபுராயனகொப்பலு, ஸ்ரீரங்கபட்டணா, மாண்டியா. ஆடித் திருவிழா கங்கா பூஜை- காலை 6:00 மணி; தாய் வீட்டு சீர்- காலை 9: 15 மணி; லட்சுமி பூஜை திருவிளக்கு பூஜை - மாலை 6:30 மணி; நிஷ கால அபிஷேகம் இரவு 11: 45 மணி. இடம்: மயான காளி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கோவில், சுவர்ண பவன் பின்புறம், உரிகம், தங்கவயல். அம்மன் கரகம் நகர்வலம்- மதியம் 12:00 மணி; சந்தன அலங்காரம் மஹா மங்களாரத்தி, கூழ்வார்த்தல், மதியம் 12:30 மணி; அன்னதானம்- பகல் 1:00 மணி; பால முனீஸ்வரர், மேல்மருவத்துார் ஓம் சக்தி அம்மன், ஸ்ரீ வாராஹி அம்மன், கால பைரவர், ஆதிசக்தி மாரியம்மன் தேர் பவனி- இரவு 8:00 மணி. இடம்: ஸ்ரீ ஆதிசக்தி மாரியம்மன் கோவில், 4வது பிளாக், ராபர்ட்சன் பேட்டை சிறப்பு பூஜைகள் - காலை: 7:00 மணி. கணபதி ஹோமம் - மாலை 5:00 மணி. இடம்: முத்து மாரியம்மன் திருக்கோவில், கென்னடிஸ் 3-வது வட்டம், அசோகா நகர், தங்கவயல் குளக்கரையில் இருந்து பூங்கரகம் பவனி, கூழ் வார்த்தல், மதியம் 12:00 மணி; சிறப்பு பூஜைகள்- மாலை 6:00 மணி; அம்மன் அலங்கார தேர் பவனி- இரவு 8:00 மணி. இடம்: முத்து மாரியம்மன் கோவில், பூசாமி காலனி, ஜெர்க்கி வட்டம், உரிகம், தங்கவயல். லேசர் ஷோ அவதுாத தத்த பீடத்தில் 45 அடி உயர காரிய சித்தி ஹனுமன் சிலை மீது '4கே புரொஜக் ஷன் மேப்பிங்' நிகழ்ச்சி - இரவு 7:10, 7:40, 8:10 மணி, இடம்: ஸ்ரீகணபதி சச்சிதானந்த ஆசிரமம், தத்தநகர், நஞ்சன்கூடு சாலை, மைசூரு. பொது விற்பனை, கண்காட்சி சஹாரா கலை மற்றும் கைவினை, கைத்தறி கண்காட்சி, விற்பனை - காலை 10:30 முதல் இரவு 9:30 மணி வரை. இடம்: ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ் மைதானம், பழைய மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம், மைசூரு. தொடர்புக்கு 90351 60215, 95900 18133. சாதனை நிகழ்ச்சி போர்ட்டிஸ் மருத்துவமனை ரோபோ உதவியுடன் 3,000 அறுவை சிகிச்சை செய்து தேசிய அளவில் சாதனை படைத்ததை கொண்டாடும் நிகழ்ச்சி. சிறப்பு விருந்தினராக கர்நாடக சுகாதார துறை அமைச்சர் காதர் பங்கேற்பு. - காலை 10:00 மணி முதல். இடம்: தி லலித் அசோக் ஹோட்டல், குமாரகிருபா சாலை, பெங்களூரு.
30-Jul-2026