உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பீன்யா மேம்பாலத்தில் வாகனங்களுக்கு தடை

 பீன்யா மேம்பாலத்தில் வாகனங்களுக்கு தடை

பீன்யா: 'பெங்களூரு பீன்யாவில் உள்ள டாக்டர் சிவகுமார சுவாமிகள் மேம்பாலத்தில் தார் போடும் பணி நடப்பதால், ஆகஸ்ட் 5 வரை பெங்களூரு நகரை நோக்கி வரும் வாகனங்களின் போக்குவரத்திற்கு தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன' என, பெங்களூரு போக்குவரத்து போலீஸ் அறிவித்து உள்ளது. அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளதாவது: துமகூரில் இருந்து பெங்களூரு நகரை இணைக்கும், பீன்யா மேம்பாலத்தில் தார் போடும் பணி மேற்கொள்ளப்படுகிறது. நேற்று முன்தினம் துவங்கிய இப்பணி, வரும் ஆக., 5ம் தேதி வரை நடக்கிறது. எனவே, பெங்களூரை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும், மேம்பாலத்தில் தினமும் இரவு 10:00 முதல், அதிகாலை 5:00 மணி வரையிலும்; சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமைகளில் மதியம் 12:00 முதல் அதிகாலை 5:00 மணி வரையிலும் தடை செய்யப்படுகிறது. எனவே, நெலமங்களாவில் இருந்து பெங்களூரு வரும் வாகனங்கள், கென்னாமெட்டல் பேக்டரி அருகில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக எட்டாவது மைல், தாசரஹள்ளி, ஜாலஹள்ளி கிராஸ், பீன்யா போலீஸ் நிலைய சந்திப்பு, எஸ்.ஆர்.எஸ்., சந்திப்பு, கோரகுன்டேபாளையா வழியாக செல்ல வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை