உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  7 எம்.எல்.சி., பதவிகளுக்கு தேர்தல் விதான் சவுதாவில் இன்று ஓட்டுப்பதிவு

 7 எம்.எல்.சி., பதவிகளுக்கு தேர்தல் விதான் சவுதாவில் இன்று ஓட்டுப்பதிவு

பெங்களூரு: கர்நாடக மேல்சபைக்கு புதிதாக ஏழு எம்.எல்.சி.,க்களை தேர்வு செய்ய, விதான் சவுதாவில் இன்று தேர்தல் நடக்கிறது. கர்நாடக மேல்சபையில் எம்.எல்.சி.,க்களாக இருக்கும் காங்கிரசின் ஹரிபிரசாத் உட்பட ஏழு பேரின் பதவிக்காலம், இம்மாதம் 30ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. புதியவர்களை தேர்வு செய்ய, பெங்களூரு விதான் சவுதாவில் இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டு போட்டு, எம்.எல்.சி.,களை தேர்வு செய்ய உள்ளனர். இதற்காக, இன்று காலை 9:00 முதல், மாலை 5:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காங்கிரசுக்கு இருக்கும் எம்.எல்.ஏ.,க்கள் பலத்தில், அவர்களால் நான்கு எம்.எல்.சி.,க்களை தேர்வு செய்ய முடியும். ஆனால், ஐந்தாவது வேட்பாளரை களம் இறக்கி உள்ளனர். ம.ஜ.த.,வும் தங்களிடம் எம்.எல்.ஏ.,க்கள் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் வேட்பாளரை இறக்கியுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கட்சி மாறி ஓட்டு போடுவதை தடுக்க, பிடதியில் 'ரிசார்ட்'டிற்கு அழைத்து செல்லப்பட்டனர். இன்று காலை அங்கிருந்து நேராக விதான் சவுதா வருகின்றனர். இந்நிலையில், நேற்று ரிசார்ட்டிற்கு சென்ற முதல்வர் சிவகுமார், ஓட்டுப்பதிவு தொடர்பாக எம்.எல்.ஏ.,க்களுக்கு செயல்முறை விளக்கம் அளித்தார். இன்று இரவுக்குள் முடிவுகள் தெரிந்து விடும். தேர்தலை ஒட்டி, விதான் சவுதாவில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை