உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  கள்ளக்காதலை தட்டி கேட்ட மனைவி கொலை

 கள்ளக்காதலை தட்டி கேட்ட மனைவி கொலை

பீதர்: பக்கத்து வீட்டு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை தட்டிக்கேட்டதால், கணவரால் தாக்குதலுக்கு ஆளான மனைவி, நேற்று உயிரிழந்தார். பீதர் நகரின், ஹொன்னிகேரி கிராமத்தை சேர்ந்தவர் சஞ்சனா, 26. இவருக்கும் பீதர் நகரின், சிவநகரில் வசிக்கும் பகவத் ஞானேஸ்வர், 30, என்பவருக்கும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், திருமணம் நடந்தது. தம்பதி சிவநகரில் வசிக்கின்றனர். பகவத் ஞானேந்தர், இந்திய ராணுவத்தில் பணியாற்றுகிறார். இவருக்கு, பக்கத்து வீட்டு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது. இதையறிந்த சஞ்சனா, கணவரிடம் கேள்வி எழுப்பியதால், தம்பதிக்கிடையே தகராறு ஏற்பட்டது. கோபமடைந்த பகவத் ஞானேஸ்வர், மனைவியை கோவிலுக்கு செல்லலாம் என கூறி, ஜூன் 25ம் தேதியன்று, பால்கி தாலுகாவின், காயமுகா கோவில் அருகில் உள்ள வனப்பகுதிக்கு, அழைத்து சென்றார். இரும்பு ராடால் மனைவியின் தலை, கழுத்தில் பலமாக தாக்கினார். பலத்த காயமடைந்த சஞ்சனா, பீதரின் பிரிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல், நேற்று காலை அவர் உயிரிழந்தார். இது குறித்து, தன்னுாரா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவாகி விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Vijay D Ratnam
ஜூலை 05, 2026 14:31

பெண்களே, புருசனுக்கு கள்ளக்காதல் இருக்கிறது என்று தெரிய வந்தால் காச் மூச்சுனு கத்தாதீங்க. நீங்க கத்துறதுனால எவனும் கள்ளக்காதலை விடமாட்டான். புத்திசாலித்தனமாக நடந்துகொள்ளுங்கள், முதற்கட்டமாக சண்டை போடுவதை விட்டு , உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று கணவன் யாருடன் எவ்வளவு காலமாக கள்ளத்தொடர்பில் இருக்கிறார், என்னையும் குழந்தைகளையும் சரியாக கவனிப்பதில்லை. அதனால் எனக்கு கடும் மன உளைச்சலை தருகிறார் என்று ஒரு கம்ப்ளெயிண்ட் பதிவு செய்து விடுங்கள். மற்றவற்றை பிறகு பார்த்துக்கொள்ளலாம். பிறகு அந்த பெண்ணை, அந்த மாதிரி பெண்ணை போலீஸ் போய் அடிக்கடி பார்த்துக்கொள்ளும். உங்கள் கணவரும் சேஃப், நீங்களும் சேஃப், குழந்தைகளும் சேஃப் .


முக்கிய வீடியோ