உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கணவரை கொல்ல முயன்ற மனைவி

கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கணவரை கொல்ல முயன்ற மனைவி

பெலகாவி : குடும்ப தகராறில் கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை வீசிய மனைவியை போலீசார் கைது செய்தனர். பெலகாவி மாவட்டம், மச்சே கிராமத்தை சேர்ந்தவர் சுபாஷ் பாட்டீல், 55. காஸ் சிலிண்டர் விநியோகம் செய்கிறார். இவரது மனைவி வைஷாலி பாட்டீல், 48. இவர்களுக்கு மூன்று மகள்கள். மூத்தவர்கள் இருவருக்கு திருமணம் ஆகிவிட்டது. இதனிடையே தம்பதி இடையே அடிக்கடி குடும்ப சண்டை ஏற்படுவது வழக்கம். நேற்று முன்தினம் இருவரும் வழக்கம்போல் சண்டையிட்டனர். ஆத்திரம் அடைந்த வைஷாலி, கொதிக்கும் எண்ணெயை, சுபாஷ் மீது ஊற்றினார். வலியால் அவர் அலறி துடித்தார். அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர், சுபாஷை மீட்டு, பெலகாவி மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்தனர். 60 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். வைஷாலியை, பெலகாவி ரூரல் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், 'சுபாஷுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகம் எழுந்ததால், கொதிக்கும் எண்ணெயை ஊற்றிக் கொலை செய்ய முயற்சித்தேன்' என, வைஷாலி கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி