கால்வாயில் அடித்து செல்லப்பட்ட வாலிபர்
கொப்பால்: நெல் அரவை இயந்திரம் கால்வாயில் விழுந்ததை பார்க்க சென்ற விவசாயி ஒருவர், கால் தவறி கால்வாயில் விழுந்து அடித்து செல்லப்பட்டார். அவரை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். கொப்பால் மாவட்டம் கங்காவதி தாலுகாவில் கேசரட்டி கிராமம் அருகில் நெல் அரவை இயந்திரம் ஏற்றி சென்ற லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, கால்வாயில் விழுந்தது. லாரியில் இருந்த ஓட்டுநர், கிளீனர் ஆகியோர் நீந்தி கரை சேர்ந்தனர். நெல் அரவை இயந்திரம், லாரியை கிரேன் மூலம் மேலே எடுக்கும் பணி நடந்தது. இதை பார்க்க, அக்கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் வந்திருந்தனர். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த நாகப்பா உப்பர், கால்வாயில் கால்தவறி விழுந்து அடித்து செல்லப்பட்டார். நீச்சல் வீரர்கள் உதவியுடன், நாகப்பாவை தேடும் பணி நடந்து வருகிறது.