உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / சிக்கந்துார் பாலத்தில் வீலிங் இளைஞருக்கு ரூ.5,000 அபராதம்

சிக்கந்துார் பாலத்தில் வீலிங் இளைஞருக்கு ரூ.5,000 அபராதம்

ஷிவமொக்கா: கடந்த மாதம் சிக்கந்துாரில் புதிதாக திறக்கப்பட்ட பாலத்தில் வீலிங் செய்த நபருக்கு, போலீசார், 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர். ஷிவமொக்கா மாவட்டம், சாகரில் உள்ள சிக்கந்துார் கேபிள் பாலத்தை, கடந்த மாதம் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி திறந்து வைத்தார். இப்பாலம் வழியாக தினமும் பலரும் சென்று வருகின்றனர். சிலர் பாலத்தில் நின்று 'செல்பி'யும் எடுத்துக் கொள்கின்றனர். அதேபோன்று, இளைஞர்கள் சிலர், தங்கள் இரு சக்கர வாகனத்தில் 'வீலிங்' செய்ய துவங்கி உள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு, இப்பாலத்தில் இளைஞர் ஒருவர் வீலிங் செய்யும் வீடியோ சமூகவலைதளத்தில் பரவியது. தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்த சாகர் ரூரல் போலீசார், வீலிங் செய்த இளைஞர் பிரதீக்கை கண்டுபிடித்து, 5,000 ரூபாய் அபராதம் விதித்தனர். மீண்டும் இத்தகைய செயலில் ஈடுபட்டால், 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, வாகன ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று எச்சரித்துள்ளனர். சாகர் ரூரல் எஸ்.ஐ., மஹாபலேஸ்வர் கூறியதாவது: பெற்றோர், 21 வயதுக்குள் இருக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு இரு சக்கர வாகனங்களை தரக்கூடாது. இரு சக்கர வாகனத்தில் இருவர் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். மொபைல் போனில் பேசியபடி, வாகனம் ஓட்டுவது, 'வீலிங்' செய்வது குற்றமாகும். 'வீலிங்' செய்து முதல் முறை பிடிபடுவோருக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து செய்தால், பைக் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் வழக்குப் பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை