மேலும் செய்திகள்
தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை பலி
13-Oct-2025
பசவேஸ்வர நகர்: தந்தையின் சிகிச்சைக்கு பணம் புரட்ட உதவாத பைக்குக்கு இளைஞர் தீவைத்தார். துமகூரு மாவட்டம், திப்துாரை சேர்ந்தவர் யஷ்வந்த்குமார், 28. இவர் பெங்களூரின், காமாட்சிபாளையாவில் குடும்பத்துடன் வசிக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு, இவருக்கு பெற்றோர் புதிதாக பைக் வாங்கிக் கொடுத்தனர். இந்த பைக் கடனில் வாங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக, இவரது தந்தையின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளிக்க பணம் தேவைப்பட்டது. யஷ்வந்த்குமாரால் பணம் புரட்ட முடியவில்லை. வேறு வழியின்றி பெற்றோர் தனக்கு வாங்கிக் கொடுத்த புது பைக்கை, அடமானம் வைத்து பணம் பெற முயற்சித்தார். கடனில் இருப்பதால், பைக்கை அடமானம் பெற யாரும் முன்வரவில்லை. தந்தைக்கு சிகிச்சையளிக்க பணம் புரட்ட வழி தெரியாமல் மனம் நொந்த யஷ்வந்த்குமார், நேற்று முன் தினம் இரவு 9:30 மணியளவில், பசவேஸ்வர நகரின், ஹாவனுார் சதுக்கத்தின் சிக்னல் அருகில், தன் பைக்கை நிறுத்தி தீ வைத்துவிட்டு சென்றுவிட்டார். சாலையின் நடுவே பைக் தீப்பிடித்து எரிவதை கண்ட அப்பகுதியினர், தீயணைப்பு படையினருக்கு, தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பசவேஸ்வரா நகர் போலீசார், பைக் பதிவு எண்ணை வைத்து, யஷ்வந்த்குமாரை கண்டுபிடித்தனர். நேற்று போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து, விசாரணை நடத்துகின்றனர்.
13-Oct-2025