உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  பன்னர்கட்டா உயிரியல் பூங்காவில் வரிக்குதிரை, நீர்யானை குட்டி ஈன்றன

 பன்னர்கட்டா உயிரியல் பூங்காவில் வரிக்குதிரை, நீர்யானை குட்டி ஈன்றன

பெங்களூரு: பன்னர்கட்டா உயிரியல் பூங்காவில், வரிக்குதிரை மற்றும் நீர்யானை ஆகியன, குட்டி ஈன்றுள்ளன. பெங்களூரு பன்னர்கட்டாவில் உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு வனவிலங்குகள் பராமரிக்கப்படுகின்றன. பூங்காவில் பராமரிக்கப்படும் கபினி என்ற பெயர் கொண்ட வரிக் குதிரை, நேற்று முன்தினம் குட்டி ஈன்றது. அடுத்த சில மணி நேரங்களில் தாஷ்யா என்ற நீர்யானையும் குட்டி ஈன்றது. ஒரே நாளில் இரு விலங்குகள் குட்டி ஈன்றதால், உயிரியல் பூங்கா ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தாய் மற்றும் குட்டி விலங்குகளின் உடல்நலனை மிகவும் கவனமாக கண்காணித்து வருகின்றனர். இது போல விலங்குகள் மாற்றத்தின் படி, தென் ஆப்பிரிக்காவில் இருந்து, பன்னர்கட்டா பூங்காவுக்கு நான்கு சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டன. அந்த சிறுத்தைகளின் தனிமைப்படுத்தும் காலம் முடிவடைந்த நிலையில், பொது மக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ