உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / வங்கி பணியாளர் வேலைநிறுத்தத்தை கையாள நெருக்கடி மேலாண்மை குழு

வங்கி பணியாளர் வேலைநிறுத்தத்தை கையாள நெருக்கடி மேலாண்மை குழு

புதுடில்லி:வங்கி பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபடும்போது வங்கி செயல்பாடுகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக, மத்திய அரசு நெருக்கடி மேலாண்மை குழு ஒன்றை அமைத்துள்ளது. பொதுத்துறை வங்கி பணியாளர்கள், வாரத்துக்கு ஐந்து பணி நாட்கள் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி 24 மற்றும் 25ம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இது திட்டமிட்டபடி நடக்கும்பட்சத்தில், அடுத்த இரு நாட்கள் வார இறுதி என்பதால் வங்கிகள் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இயங்காது. இதனால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படும். இந்நிலையில், இந்த வேலை நிறுத்த போராட்டம் மட்டுமல்லாது, இனி வரும் காலங்களில் இதுபோன்ற அவசர கால சூழலை கையாள ஏதுவாக, நெருக்கடி மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இக்குழு, இது போன்ற காலங்களில் வங்கிகள் சுமூகமாக செயல்படுவதை உறுதி செய்ய, வங்கிகளுடன் இணைந்து நடைமுறைகளை வலுப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பொதுத்துறை வங்கிகள் மற்றும் எல்.ஐ.சி., யின் கீழ் இயங்கும் ஐ.டி.பி.ஐ., வங்கியின் பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், நெருக்கடி மேலாண்மை திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும்; வங்கிகள் அமைந்துள்ள இடம், அவை வழங்கும் சேவைகளுக்கு ஏற்ப அவற்றுக்கான செயல்பாட்டு நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் வங்கி நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

 ஏ.டி.எம்.,களில் பணத்தை நிரப்பி வைப்பது  தடையற்ற இணைய வங்கி சேவை வழங்குவது வங்கி கிளைகளில் தடையற்ற சேவையை உறுதி செய்வது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ