மேலும் செய்திகள்
தொழில் துறை உற்பத்தி 9 மாதங்களில் இல்லாத சரிவு
01-Jul-2025
புதுடில்லி: நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின் கடந்த ஜூன் மாதத்தில் மைனஸ் 0.13 சதவீதமாக எதிர்மறை சரிவு கண்டுள்ளது. இதுகுறித்து, மத்திய வர்த்தக அமைச்சக தரவு தெரிவிப்பதாவது: கடந்த மே மாதத்தில், மொத்த விலை பணவீக்கம் 0.39 சதவீதமாக இருந்தது. கடந்த ஜூன் மாதம், இது மைனஸ் 0.13 சதவீதமாக குறைந்துள்ளது. உணவுப் பொருட்கள், அடிப்படை உலோகங்கள் உற்பத்தி, கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை குறைவு இதற்கு காரணம்.https://x.com/dinamalarweb/status/1944931652209402344ஆண்டு அடிப்படையில் ஒப்பிடுகையில், இது கடந்தாண்டு ஜூனில் 3.43 சதவீதமாக இருந்தது. தொடர்ச்சியாக ஏழு மாதங்களாக மொத்த விலை பணவீக்க குறியீட்டு எண் குறைந்து வருவது, இந்தியாவின் பொருளதார வளர்ச்சிக்கு சாதகமான அறிகுறி என்று பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
01-Jul-2025