வாரிசுகளுக்கு பங்கு பத்திரங்கள் விதிகளை எளிமையாக்கிய செபி
பங்குகள், பத்திரங்கள், மியூச்சுவல் பண்டுகள் போன்ற சொத்துகளை இறந்த முதலீட்டாளர்களின் வாரிசுகள் கோருவதற்கான விதிகளை செபி எளிமைப்படுத்தியுள்ளது. செபியின் 214வது கூட்ட முடிவுகள் நேற்று வெளியாகின. அதில், பங்கு சந்தை வாயிலாகவே பங்குகளை திரும்பபெறும் முறை மீண்டும் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று செபி தெரிவித்துள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c9gr5zc2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நகராட்சி பத்திரங்களில் மூத்த குடிமக்கள், பெண்கள், விதவைகள், ராணுவ ஊழியர்கள், சிறு முதலீட்டாளர்கள் போன்றோருக்கு கூடுதல் வட்டி விகிதம், பத்திர விலையில் தள்ளுபடி போன்ற சலுகைகளை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. வாரிசுகளுக்கு சிறிய மதிப்பு கொண்ட கிளைம்களுக்கு புதிதாக விரைவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எளிய ஆவண முறையின் கீழ் கிளைம் செய்வதற்கான வரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது.