உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஓரியன்ட் டெக்னாலஜிஸ் ஐ.பி.ஓ., 21ம் தேதி துவக்கம்

ஓரியன்ட் டெக்னாலஜிஸ் ஐ.பி.ஓ., 21ம் தேதி துவக்கம்

புதுடில்லி,:தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கும் 'ஓரியன்ட் டெக்னாலஜிஸ்' நிறுவனம், 215 கோடி ரூபாய் திரட்டுவதற்காக ஐ.பி.ஓ., எனும் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. வரும் 21ம் தேதி துவங்கி, 23ம் தேதி வரை, புதிய பங்கு வெளியீடு நடைபெற உள்ளது. ஒரு பங்கின் விலை 195-206 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவன பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளன. புதிய பங்குகளை வெளியிடுவதன் வாயிலாக 120 கோடி ரூபாயும்; பங்குதாரர்களின் 46 லட்சம் பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக, 95 கோடி ரூபாயும் என, 215 கோடி ரூபாய் திரட்டப்பட உள்ளது. இந்நிதி, மூலதன செலவுகள் மற்றும் பொது நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மும்பை, புனே, அகமதாபாத், புதுடில்லி, பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களிலும், சிங்கப்பூரிலும் இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் சேவை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இகாம் எக்ஸ்பிரஸ்

தொழில்நுட்பம் சார்ந்த சரக்கு கையாளுகை நிறுவனமான 'இகாம் எக்ஸ்பிரஸ்' புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 2,600 கோடி ரூபாய் நிதி திரட்டுவதற்காக செபியிடம் விண்ண-ப்பித்துள்ளது.

ஜே.எஸ்.டபிள்யு., சிமென்ட்

ஜே.எஸ்.டபிள்யு., சிமென்ட் நிறுவனம் விரைவில் 4,000 கோடி ரூபாயை திரட்டும் வகையில், புதிய பங்கு வெளியீட்டுக்கு வர திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை