தங்கம் இறக்குமதிக்கு 3% ஜி.எஸ்.டி., வாடிக்கையாளர்களை பாதிக்காது
'தங்க நகை விற்பனைத்துறை அடுத்த 5 ஆண்டுகளில் சிறப்பான வளர்ச்சி அடையும்' என்கிறார், 'டைட்டன்' நிறுவனத்தின் நகை பிரிவு தலைமை செயல் அதிகாரி அருண் நாராயண். அவர், நம் நாளிதழுக்கு அளித்த பேட்டி: தங்கம் விலை உயர்வால் விற்பனை குறைந்துள்ளதா? வி லை உயர்வால் மக்கள் வாங்கும் தங்கத்தின் எடையளவு குறைகிறது. ஆனால், பண மதிப்பின் அடிப் படையில் விற்பனை அதிகரிக்கிறது. இணையவழி தங்க விற்பனைக்கு ஆதரவு எப்படி? மிக கு றைவு. பரிசளிப்பதற்காக 20,000 முதல் 30,000 ரூபாய் மதிப்புள்ள குறைந்த விலை நகைகளை வாங்குவது மட்டுமே இணையவழியில் நடக்கிறது. அதேவேளையில், வாடிக்கையாளர்கள் இணையவழியில் பல மாதங்கள் ஆய்வு செய்துவிட்டு, பல கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு, நேரில் வந்தே நகைகளை வாங்குகின்றனர். வாடிக்கையாளர்களின் நுகர்வு பழக்கத்தில் மாற்றங்கள் உள்ளனவா? பழைய தங்கத்தை கொடுத்து புதிய தங்கம் வாங்குவது 'அதிகரித்துள்ளது. தினசரி பயன்பாட்டுக்கான எடை குறைந்த நகைகளை வாங்கும் போ க்கும், 22 காரட்டுக்கு பதிலாக 18, 14 காரட் தங்கத்தை வாங்கும் மனநிலையும் வந்துவிட்டது. அடுத்த 5 ஆண்டுகளில் இத்துறை எப்படி இருக்கும்? நாட்டின் பொருளாதாரம் வளர்ந்து வருவதால், இத்துறை எதிர்காலத்தில் சிறப்பாகவே செயல்படும் . நுகர்வோரின் வாழ்வாதா ரம் உயரும்போது, தங்க முதலீட்டின் மீதான நம்பிக்கையும் அதிகரிக்கும். தங்க இறக்குமதிக்கான 3% ஜி.எஸ்.டி., வரிசலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது, வாடிக்கையாளர்களை பாதிக்குமா? இல்லை ; சில்லரை விலையில் எந்த மாற்றமும் இருக்காது. ஏற்கனவே தங்க நகைக்கு ஜி.எஸ்.டி., நடைமுறையில் உள்ளதால், இரட்டை வரிவிதிப்புக்கும் வாய்ப் பில்லை. பு திய நகை வரிசைகளை எப்போதெல்லாம் அறிமுகம் செய்கிறீர்கள்? அக்.,-- ஜன., வரையிலான கா ல கட்டமே பிரதான விற்ப னை பருவமாகும். நான்கு மா தங்களுக்கு ஒருமுறை புதிய நகைகளை அறிமுகம் செய்கிறோம். வரவிருக்கும் தீபாவளிக்காக 'அத்யந்திரா' எனும் 18, 22 காரட் தங்க நகை தொடரை குறை ந்தபட்சம் 75,000 ரூபாய் விலையில் அறிமுகப் படுத்துகிறோம்.