மேலும் செய்திகள்
நாட்டின் ஏற்றுமதி ரூ.80 லட்சம் கோடி
16-Apr-2026
நம் நாட்டில், கடந்த 2025 - 26ம் நிதியாண்டில் 55,200க்கும் மேற்பட்ட 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2016ல் 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டம் துவங்கப்பட்டதிலிருந்து, இதுவே ஓர் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட அதிக எண்ணிக்கை என தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய விபரங்கள் கடந்த மார்ச் மாத நிலவரப்படி, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட மொத்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை, 2.23 லட்சத்தை தாண்டியுள்ளது இந்நிறுவனங்களின் வாயிலாக 23.36 லட்சத்திற்கும் அதிகமான நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன * தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் கிட்டத்தட்ட 1.53 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் 2024 - 25 36,400 2025 - 26 55,200 அதிகரிப்பு 51.60% வேலைவாய்ப்பு உருவாக்கம் 2024 - 25 3.67 லட்சம் 2025 - 26 4.99 லட்சம் அதிகரிப்பு 36.10% காப்புரிமை தாக்கல் செய்த நிறுவனங்கள் 2024 - 25 2,850 2025 - 26 4,480அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் முன்னிலை வகிக்கும் மாநிலங்கள் (மார்ச் 2026 நிலவரம்) மஹாராஷ்டிரா 38,660 கர்நாடகா 22,600 உத்தர பிரதேசம் 21,960 டில்லி 21,120 குஜராத் 19,270 தமிழகம் 14,830
16-Apr-2026