உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  ஏர் இந்தியாவுக்கு புதிய சி.இ.ஓ.,

 ஏர் இந்தியாவுக்கு புதிய சி.இ.ஓ.,

மும்பை: ஏர் இந்தியாவின் புதிய தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக, எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் குழும தலைமை செயல் அதிகாரி டெவோல்டே கேப்ரிமரியம் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய தலைமை செயல் அதிகாரி கேம்ப்பெல் வில்சன், ஏப்ரல் மாதத்தில் பதவி விலகல் கடிதம் அளித்திருந்தா ர். புதிய தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்படும் வரை அவர் பதவியில் தொடர ஒப்புக்கொண்டுள்ளார். டெவோல்டே கேப்ரிமரியம், எத்தியோப்பியன் ஏர்லைன்ஸில், 36 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார். அதில், 11 ஆண்டுகள் குழும தலைமை செயல் அதிகாரியாக இருந்துள்ளார். புதிய தலைமை செயல் அதிகாரி பொறுப்பேற்கும் தேதி மற்றும் பொறுப்பு மாற்றம் பின்னர் அறிவிக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை