பஜாஜ் வசமாகிறது கே.டி.எம்.,
ஆஸ்திரியாவைச் சேர்ந்த பைக் தயாரிப்பாளரான கே.டி.எம்., நிறுவனத்தை, பஜாஜ் ஆட்டோ நிறுவனம் 7,765 கோடி ரூபாய் கடன் திட்டத்தின் வாயிலாக கையகப்படுத்த உள்ளது. ஏற்கனவே நிறுவனத்தின் 37.50 சதவீத பங்குகளை வைத்துள்ள பஜாஜ், இதன் வாயிலாக பெரும்பான்மை பங்குதாரராக உருவெடுக்க உள்ளது. இந்த கடன் உதவி திட்டம், ஆஸ்திரியாவின் ஒழுங்குமுறை ஆணையங்களின் ஒப்புதலுக்கு உட்பட்டது.