உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / 3 மாதத்துக்கு ஒருமுறை பென்ஸ் கார் விலை உயரும்

3 மாதத்துக்கு ஒருமுறை பென்ஸ் கார் விலை உயரும்

புதுடில்லி அடுத்தாண்டில் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கார் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக, 'மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா' நிறுவனம் தெரிவித்துள்ளது. யூரோ நாணயத்துக்கு எதிரான இந்திய ரூபாயின் சரிவை ஈடுகட்டவே இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி முதல் கார்களின் விலையை இரண்டு சதவீதம் உயர்த்துவதாக இந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், யூரோவுக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய விலை உயர்வு அவசியம் என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி