பட்ஜெட் கருத்துகள்
சுரங்க தொழிலுக்கு உத்வேகம் அ ரிய வகை தாதுக்களை எடுத்துச்செல்ல பிரத்யேக வழித்தடத்தை தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிஷா மாநிலங்களில் உருவாக்க இருப்பதாக மத்திய பட்ஜெட்டில் அறிவித்திருப்பதை, சி.ஐ.ஐ., எனும் இந்திய தொழில் வர்த்தக அமைப்பு வரவேற்றுள்ளது. இவ்வழித்தடங்கள் உருவானால், சுரங்கத்தொழில், அது தொடர்பான செயல்பாடுகள், ஆய்வுகள் உத்வேகம் பெறும். இது, அரியவகை காந்தங்கள் துறையில் இந்தியாவின் தலைமையை மேலும் வலுப்படுத்தும் என அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. --சி.ஐ.ஐ., அ றிக் கை பிரச்னைக்கு தீர்வு இல்லை ம த்திய பட்ஜெட், தொழில்துறைக்கும் உட்கட்டமைப்புக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளதை, தமிழக சிறு மற்றும் குறுந்தொழில் சங்கமான டான்ஸ்டியா வரவேற்கிறது. உட்கட்டமைப்பு வளர்ச்சிக்காக 12.20 லட்சம் கோடியில் மூலதன செலவு அறிவிக்கப்படிருக்கிறது. இது, தொழில் சூழலுக்கு ஊக்கமளித்து, துணைத்தொழில்களுக்கு தொடர்ச்சியான தேவையை உருவாக்கும். அதே நேரத்தில் குறுந்தொழில்கள் சந்திக்கும் நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது. - - வாசுதேவன், தலைவர், டான்ஸ்டியா