உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  குறு, சிறு நிறுவனங்களை வழிநடத்த சி.ஐ.ஐ., தனி குழு

 குறு, சிறு நிறுவனங்களை வழிநடத்த சி.ஐ.ஐ., தனி குழு

கோவை: குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு, சி.ஐ.ஐ., தனி குழு அமைத்துள்ளது. சி.ஐ.ஐ., தென் மண்டல தலைவர் ரவிச்சந்திரன் கூறியதாவது: இந்திய தொழில் கூட்டமைப்பின் கீழ், எம்.எஸ்.எம்.இ., எனப்படும் குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவன உறுப்பினர்கள் 10,000க்கும் அதிகமானோர் உள்ளனர். தமிழகத்தில், 1,700 பேர் உள்ளனர். தென் மண்டலம், 34 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தியை கொண்டுள்ளது. எம்.எஸ்.எம்.இ.,கள் வளர்ந்தால்தான் வலுவான இந்தியாவை உருவாக்க முடியும். எல்லாமே டிஜிட்டல் ஆகிவிட்ட நிலையில், டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு நிறைய எம்.எஸ்.எம்.இ.,கள் வரவில்லை. எனவே, டிஜிட்டல் மயம், செயற்கை நுண்ணறிவு குறித்து கற்றுக்கொடுத்து வருகிறோம். தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் பங்களிப்பு குறித்து எம்.எஸ்.எம்.இ.,களுக்கு உதவ, தனி குழு அமைத்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை