உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வேலைவாய்ப்பு வளர்ச்சியில் கோவை முதலிடம் பிடிக்கும்: ‘பவுண்டிட்’ ஆய்வு அறிக்கை

வேலைவாய்ப்பு வளர்ச்சியில் கோவை முதலிடம் பிடிக்கும்: ‘பவுண்டிட்’ ஆய்வு அறிக்கை

கோவை: உள்நாட்டில், வரும் 2027ம் ஆண்டில் அலுவலக வேலைவாய்ப்பு வளர்ச்சியில் கோயம் புத்துார் நகரம், பெங்களூரு, ஹைதராபாதை பின்னுக்கு தள்ளி, 12.52 சதவீதத்துடன் முதலிடம் பிடிக்கும் என, ‘பவுண்டிட்’ நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வரும் 2027ல், நாடு முழுதும் அலுவலக வேலைவாய்ப்புகள் 8.16 சதவீதம் வளர்ந்து, 1.38 கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது 2026ல் பதிவான 3.30 சதவீத வளர்ச்சியைவிட அதிகம். கடந்த 2026ம் ஆண்டில் கோயம்புத்துாரில் வேலைவாய்ப்பு வளர்ச்சி 1.86 சதவீதம் சரிந்திருந்த நிலையில், வரும் 2027ல் 12.52 சதவீத வளர்ச்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, நுகர்வோர் மின்னணு பொருட்கள் துறையில் 14.25 சதவீதம், சில்லரை வர்த்தகத்தில் 13.99 சதவீதம், உற்பத்தித் துறையில் 12.02 சதவீதம் வேலைவாய்ப்பு வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, உற்பத்தி துறையில் வேலைவாய்ப்பு வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதால், தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ள கோவைக்கு இது சாதகமான வாய்ப்பாக அமையலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !