உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு சலுகை சிறு, குறு தொழிலுக்கும் வழங்க கோரிக்கை

 உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு சலுகை சிறு, குறு தொழிலுக்கும் வழங்க கோரிக்கை

சென்னை: பெரிய நிறுவனங்களுக்கு உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தில் நிதியுதவி வழங்குவது போல் சிறு, குறுந்தொழில்களுக்கும் வழங்க மத்திய அரசுக்கு, தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர். நம் நாட்டின் உற்பத்தி திறனை ஊக்குவிக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும் முக்கிய துறைகளை சேர்ந்த தொழி ல் நிறுவனங்களுக்கு, பி.எல்.ஐ., என ப்படும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தை, மத்தி ய அரசு செயல்படுத்துகிறது. ஊக்கத்தொகை இத்திட்டத்தின் கீழ் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், மருத்துவ சாதன துறைகளை சேர்ந்த நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதை சிறு, குறுந்தொழில்களுக்கும் வழங்க மத்திய அரசுக்கு, தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, 'டான்ஸ்டியா' எனப்படும் தமிழக சிறு மற்றும் குறுந் தொழில்கள் சங்க தலை வர் வாசுதேவன் கூறியதாவது: ஊக்கத்தொ கை பெறும் துறைகளை சேர்ந்த நிறுவனங்களுக்கு தேவைப்படும் உதிரி பாகங்க ளை, சிறு, குறுந்தொ ழில்கள் தான் உற்பத்தி செய்து தருகின்றன. ஏற்றுமதியில் சிறு, குறு, நடுத்தர தொழில்களின் பங்கு, 49 சதவீதமாக உள்ளது. பாதிப்பு பெரிய நிறுவனங்களிடம் இருந்து குறித்த காலத்திற்குள் பணம் கிடைக்காதது, வங்கி கடன் தாமதம், மூலப்பொருட்கள் விலை உயர்வு போன்றவற்றால் சிறு, குறுந்தொழில்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. எனவே, சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கும் உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்பு சலுகை வழங்க வேண்டும். இது, அந்நிறுவனங்கள் புதிய தொழில்நுட்பங்களை பின்பற்ற உதவும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்