டிஜிட்டல் விளம்பரங்கள் அதிகம் நினைவில் நிற்பதோ குறைவு
சமூக வலைதளங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் வீடியோ செயலிகளில் வரும் விளம்பரங்கள் அதிகரித்துள்ளன. ஆனால், மக்களின் நினைவில் நிற்பவை எவை என்றால், ஒவ்வொருரின் சராசரி ஒன்றரை விளம்பரமே என்கிறது ஆய்வு. ஹன்சா ரிசர்ச் நிறுவனம் நாட்டின் 10 முக்கிய நகரங்களில் 3,000 நபர்களிடம் நேரடியாக நடத்திய ஆய்வு முடிவுகளை ஆர்.கே., ஸ்வாமி இந்திய சந்தைகள் ஆராய்ச்சி நிறுவனம் இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. சராசரியாக தனிநபர் நினைவில் உள்ள பிராண்டுகள் 1.50 % 3 சதவீதத்துக்கு அதிக நபர்களால் நினைவில் கொள்ளப்பட்டிருக்கும் பிராண்டுகள் 11 அவை: செப்டோ சொமாட்டோ மீஷோ நெஸ்கபே பிளிப்கார்ட் அமேசான் ஸ்விக்கி பிளிங்கிட் கன்ட்ரி டிலைட் ரம்மி சர்கிள் ட்ரீம் 11 வீடியோ பார்க்க அதிகம் பயன்படுத்தப்படும் செயலிகள் யூ ட்யூப் வாட்ஸாப், இன்ஸ்டாகிராம் என்ன காரணம் * பொதுவான தளம் என்று இல்லாமல் பல தளங்களில் விளம்பரப்படுத்தப்படுவது * தொலைக்காட்சியை போல பிரைம் டைம் என்ற அளவீடு இல்லாதது * விளம்பரங்களை புறந்தள்ள உதவும் ஸ்கிப் ஆப்ஷன்; 78 சதவீதம் பேர் ஸ்கிப் செய்துவிடுகின்றனர் * கிட்டத்தட்ட 60 சதவீதம் பேர் தங்களுக்கு சம்பந்தமில்லாத விளம்பரங்கள் வருவதாக தெரிவித்துள்ளனர் விளைவு * பலராலும், விளம்பரங்களை குறிப்பிட்டு அடையாளம் காண முடியவில்லை * மொபைல் போன் விளம்பரம், ஆடை விளம்பரம் என பொதுப்படையாகவே அடையாளம் காண்கின்றனர்