உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கடன் பத்திர வருவாய் சரிவு அன்னிய முதலீடு பாதிக்கலாம்

கடன் பத்திர வருவாய் சரிவு அன்னிய முதலீடு பாதிக்கலாம்

புதுடில்லி:அமெரிக்க கடன் பத்திரங்களுடன் ஒப்பிடுகையில், இந்திய கடன் பத்திர முதலீட்டுக்கான வட்டி வருவாய், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத சரிவு கண்டிருப்பதால், அன்னிய முதலீடுகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கான அமெரிக்க கடன் பத்திர முதலீட்டுக்கான வட்டி வருவாய், கடந்த ஏழு மாதங்களில் மிக அதிக அளவாக 0.13% அதிகரித்து 4.52% ஆக உள்ளது.இந்திய கடன் பத்திரங்களின் வட்டி வருவாய் 0.05% அதிகரித்து 6.79% ஆக உள்ள நிலையில், அமெரிக்க கடன் பத்திர வருவாய் அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், 0.08% குறைந்துள்ளது. இதனால், இரு நாடுகளின் கடன் பத்திர வட்டி வருவாய் வித்தியாசம் 2.27% என்ற அளவில் குறைந்திருப்பதால், இந்தியாவில் கடன் பத்திர முதலீடு பாதிக்கப்படலாம் என கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி