உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  பிப்ரவரி சரக்கு ஏற்றுமதி சற்றே சரிவு

 பிப்ரவரி சரக்கு ஏற்றுமதி சற்றே சரிவு

புதுடில்லி: கடந்த மாதம் நாட்டின் சரக்கு ஏற்றுமதி 0.81 சதவீதம் என்ற அளவில் சிறிய சரிவை கண்டுள்ளதாக, மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு பிப்ரவரியில், இறக்குமதி மற்றும் வர்த்தக பற்றாக்குறை கணிசமாக அதிகரித்துள்ளது. எனினும், முந்தைய ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இவை இரண்டும் குறைந்துள்ளன. கடந்த மாத இறுதியில் தான், ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போர் துவங்கிய நிலையில், இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இம்மாதத்துக்கான வர்த்தக தரவுகளில் தான் தெரியவரும். ஆதரவு அளிக்கப்படும் நடப்பாண்டு இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு சவால் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. மேற்காசிய போர் காரணமாக சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நடப்பு மார்ச் மாதத்துக்கான ஏற்றுமதி குறைய வாய்ப்புள்ளது. இந்த சவாலான சூழலில், ஏற்றுமதியாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்த வாரத்துக்குள் குறிப்பிட்ட சில திட்டங்கள் அறிவிக்கப்படும். - ராஜேஷ் அகர்வால் செயலர், மத்திய வர்த்தக துறை* கடந்த மாதம் 68,400 கோடி ரூபாய்க்கு தங்கமும்; 15,200 கோடி ரூபாய்க்கு வெள்ளியும் இறக்குமதி * ஆண்டு ஒப்பீட்டில் தங்க இறக்குமதி 218 சதவீதமும்; வெள்ளி இறக்குமதி 285 சதவீதமும் உயர்வு * பிப்ரவரியில் கச்சா எண்ணெய் இறக்குமதி 9 சதவீதம் உயர்ந்து 1.19 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிப்பு பிப்ரவரி சரக்கு வர்த்தக நிலவரம் (ரூ.லட்சம் கோடி) ஏற்றுமதி 2025 3.39 2026 3.37 0.81% சரிவு இறக்குமதி 2025 4.72 2026 5.86 24% உயர்வு வர்த்தக பற்றாக்குறை 2025 1.33 2026 2.49 87% உயர்வு

தள்ளிப்போகிறது ஒப்பந்தம்

அமெரிக்கா, அதன் வரி கட்டமைப்பு மற்றும் நாடுகள் வாரியான வரி விகிதங்களை இறுதி செய்த பின்னரே, அந்நாட்டுடன் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என, வர்த்தகத்துறை செயலர் ராஜேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். அமெரிக்க அரசு விதித்த பரஸ்பர வரியை, அந்நாட்டு உச்ச நீதி மன்றம் கடந்த மாதம் ரத்து செய்த நிலையில், தற்போது பரஸ்பர வரி நடைமுறையில் இல்லை என கூறிய அவர், அமெரிக்க அரசு சில பொருட்களின் மீது 10 சதவீத வரி விதித்துள்ளதை சுட்டிக்காட்டினார். முன்னதாக, இம்மாதத்துக்குள் அமெரிக்கா உடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை