ஜி.டி.பி தரவுகள் வெளியீடு ஜூன் 7ம் தேதிக்கு மாற்றம்
புதுடில்லி:மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விபரம்: பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் நிதியாண்டு முடிவடைந்ததில் இருந்து 60 நாட்களுக்குள் தணிக்கையிடப்பட்ட நான்காவது காலாண்டு மற்றும் ஆண்டு நிதி முடிவுகளை தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நிறுவனங்கள் தங்களது நிதி அறிக்கைகளை மே 31ம் தேதியை ஒட்டியே சமர்பிக்க உள்ளன. மேலும், மார்ச் மாதத்திற்கான மத்திய அரசின் முக்கிய நிதி தரவுகளும் இரண்டு மாத தாமதத்திற்கு பிறகே இறுதி செய்யப்படுகின்றன. இதனால் வழக்கமாக மே மாதத்தின் இறுதி வேலை நாளன்று வெளியிடப்படும் முழு நிதியாண்டு மற்றும் நான்காம் காலாண்டு ஜி.டி.பி., தரவுகள், ஜூன் 7ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.