உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு வாங்க அரசு ஆர்டர்

ட்ரோன் எதிர்ப்பு அமைப்பு வாங்க அரசு ஆர்டர்

புதுடில்லி:பரஸ் டிபன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான பரஸ் ஆன்ட்டி ட்ரோன் டெக்னாலஜிஸ் நிறுவனத்திடம், ராணுவ அமைச்சகம் 46 கோடி ரூபாய் மதிப்பிலான ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளை வாங்க ஆர்டர் வழங்கியுள்ளது. இதில், ட்ரோன் ஜாமர்கள் உள்ளிட்ட பல ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகள் அடங்கும். இந்த ஆர்டரின் படி, அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பை வினியோகம் செய்ய வேண்டும். பரஸ் டிபன்ஸ் , ராணுவம் மற்றும் விண்வெளி தொடர்பான தொழில்நுட்பங்களை வடிவமைப்பது, உருவாக்குவது, உற்பத்தி செய்வது, சோதனை செய்வது உள்ளிட்டவற்றை செய்து வருகிறது..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை