உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  வட்டி மானிய திட்டத்தை மீண்டும் துவங்க வேண்டும்

 வட்டி மானிய திட்டத்தை மீண்டும் துவங்க வேண்டும்

மதுரை: புதிய குறுந்தொழில் முனைவோருக்காக தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (டி.ஐ.ஐ.சி., ) வாயிலாக வழங்கப்பட்டு வந்த 6 சதவீத வட்டி மானிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டுமென, தமிழக அரசுக்கு தொழிற்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: எம்.எஸ்.எம்.இ., தொழில் துறையினர் தமிழக அரசின் டி.ஐ.ஐ.சி., நிறுவனத்தில் தொழில்க டன் பெறும் போது, கடன் தொகையில் 20 முதல் 30 சதவீதம் வரை வட்டி மானியம் வழங்கப்பட்டது. அதாவது 12 சதவீத வட்டிக்கு டி.ஐ.ஐ.சி., நிறுவனத்தில் கடன் பெற்றால், கடனை திருப்பி செலுத்திய நிலையில் 6 சதவீத வட்டி மானியமாக வழங்கப்பட்டது. மூன்றாண்டுகளாக வட்டி மானியம் நிறுத்தப்பட்டுள்ளது. அதை மீண்டும் வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை