ஹார்டு வொர்க்கர் பிராண்டு: ராம்கோ அறிமுகம்
சென்னை:'ராம்கோ சிமென்ட்ஸ்' நிறுவனம், டைல்ஸ் ஒட்டுதல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது கட்டுமான கெமிக்கல் பொருட்கள் சந்தைப்படுத்துதலுக்கு, 'ஹார்டு வொர்க்கர்' பிராண்டை அறிமுகம் செய்துள்ளது. இந்த பிராண்டின் கீழ், டைல்ஸ் ஒட்டுதல், நீர்ப்புகா தீர்வுகள், கட்டுமான பாதிப்பை சரிசெய்யும் கெமிக்கல் உள்ளிட்ட, 20 கட்டுமான கெமிக்கல் தயாரிப்புகள் இடம்பெற்று உள்ளன. இவை, விருதுநகர், சேலம், சென்னை உட்பட ஐந்து இடங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. ராம்கோ சிமென்ட்ஸ் நிர்வாக இயக்குநர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா கூறியதாவது: இந்திய கட்டுமான கெமிக்கல் பொருட்கள் சந்தை, அதிவேக வளர்ச்சி கண்டு வருகிறது. வரும் 2030க்குள், 40,000 கோடி ரூபாயை இது எட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுமான தொழிலாளர்கள், கட்டுமான நிறுவனங்கள் முதல், தனிப்பட்ட வீட்டு உரிமையாளர்கள் வரை அனைவரின் கடின உழைப்பு மனப்பான்மையை கவுரவிக்கும் விதமாக எங்கள் பிராண்டிற்கு, 'ஹார்டு வொர்க்கர்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.