உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்த தனியாருக்கு அழைப்பு

சுற்றுலா மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்த தனியாருக்கு அழைப்பு

சென்னை: துாத்துக்குடி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில், சுற்றுலா மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த, தனியார் முதலீட்டாளர்களுக்கு, தமிழக அரசின், ‘சிப்காட்’ நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்திற்கு வரும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், இந்த துறையில் முதலீட்டை ஈர்க்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, தஞ்சை மாவட்டம் தளவாய் பாளையம், துாத்துக்குடி மீளவிட்டான் ஆகிய இடங்களில் நகர்ப்புற சுற்றுலா திட்டங்களை செயல்படுத்த, தனியார் முதலீட்டாளர்களுக்கு, சிப்காட் அழைப்பு விடுத்துள்ளது. இங்கு, வணிக விடுதி, ரிசார்ட் அமைக்கலாம். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகில் உள்ள பெரியகுத்தகை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகில் உள்ள கரியலுாரில் நல்வாழ்வு மையம், ரிசார்ட், சாகச சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தலாம். விருப்பம் உள்ள முதலீட்டாளர்கள் சிப்காட் இணையதளத்தில் வரும் டிச., 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தகுதியான நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும். தஞ்சை, துாத்துக்குடி, நாகை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், திட்டடங்களை செயல்படுத்த, நிறுவனங்களுக்கு ‘சிப்காட்’ அழைப்பு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ