உணவு டெலிவரி மட்டும் போதுமா?
இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், உணவு மற்றும் மளிகைபொருட்கள் டெலிவரியில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.வேலை கிடைக்காத இளைஞர்களை குறைந்த ஊதியத்துக்கு பணியமர்த்தி, பணக்காரர்களுக்கு வீட்டிலிருந்த படியே எளிதாக உணவு கிடைக்க வழி செய்துள்ளன. நம் நாட்டு இளைஞர்கள் சாதாரண டெலிவரி ஊழியராக இருந்தால் போதுமானதா என்று சிந்தித்து பார்க்க வேண்டும். சீன ஸ்டார்ட்அப்களை பாருங்கள், ரோபாட்டிக்ஸ், மெஷின் லேர்னிங், 3டி தயாரிப்பு, அடுத்த தலைமுறை தொழிற்சாலைகள் என முன்னேறிக் கொண்டிருக்கின்றன. நாம் இங்கு செய்துகொண்டிருப்பது ஸ்டார்ட் அப் கிடையாது. ஒரு தொழில்முனைவு முயற்சி. ஸ்டார்ப் அப் உலகில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும் என்றால், செமிகண்டக்டர், செயற்கை நுண்ணறிவு போன்ற அதி நவீன தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டும். - பியுஷ் கோயல்மத்திய அமைச்சர், வர்த்தக துறை