மேலும் செய்திகள்
'பயோடெக்' தொழில் பூங்கா ஆலோசனை நிறுவனம் தேர்வு
18-Dec-2025
சென்னை, ஜான்சன் எலக்ட்ரிக் நிறுவனம் தொழிற்சாலை அமைக்க, ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கத்தில் உள்ள, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் தொழில் பூங்காவில், 26.69 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம், தொழில் பூங்காவில், பி.எம்.டி.சி., மோட்டார்ஸ் உள்ளிட்ட வாகன உதிரிபாகங்களை தயாரிக்க உள்ளது. இதற்காக, 1,300 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் அங்கு இந்நிறுவனம் தனது பணிகளை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆலையால், வாகன உதிரிபாக தயாரிப்பு, தமிழகத்தில் அதிகரிப்பதுடன் நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது.
18-Dec-2025