உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / சென்னை ஐ.ஐ.டி.,யில் லாஜிஸ்டிக் ஆய்வகம்

சென்னை ஐ.ஐ.டி.,யில் லாஜிஸ்டிக் ஆய்வகம்

சென்னை:சென்னை ஐ.ஐ.டி., நிறுவனம், அமெரிக்காவின் 'பெடெக்ஸ்' நிறுவன உதவியுடன், லாஜிஸ்டிக் துறை சார்ந்த ஆய்வு மையத்தை நிறுவி உள்ளது. சென்னை ஐ.ஐ.டி.,யில், அமெரிக்க போக்குவரத்து நிறுவனமான 'பெடரல் எக்ஸ்பிரஸ் கார்ப்பரேஷன்' நிறுவனத்தின், 41 கோடி ரூபாய் நிதி உதவியுடன், லாஜிஸ்டிக் ஆய்வு மையம் திறக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி லாஜிஸ்டிக் துறையை மேம்படுத்துவதற்கான ஆய்வுகள் இங்கு நடைபெற உள்ளன. இதுகுறித்து, சென்னை ஐ.ஐ.டி., இயக்குநர் காமகோடி கூறுகையில், ''ஒரு நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் சீரான, திறமையான லாஜிஸ்டிக்சின் பங்கு முக்கியம். அந்த வகையில், வினியோக தொடர் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுடன், மனிதவளம் மற்றும் உள்கட்டமைப்பு தொடர்பான சவால்களுக்கான தீர்வுகளையும் இந்த மையம் கண்டறியும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை