உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / புதிய லோகோ டிட்கோ வெளியீடு

புதிய லோகோ டிட்கோ வெளியீடு

சென்னை:தமிழக அரசின் தொழில் துறையின் கீழ் செயல்படும், 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம், புதிய லோகோவை அறிமுகம் செய்துள்ளது. தொழில் துறை அமைச்சர் ராஜா, டிட்கோவின் புதிய, 'லோகோ' எனப்படும் இலச்சினையை நேற்று வெளியிட்டார்.கடந்த 1965ம் ஆண்டில் துவக்கப்பட்ட இந்நிறுவனம், மாநிலத்தில் கூட்டு முயற்சிகள் வாயிலாக, பெரிய அளவிலான தொழில்களை மேம்படுத்துகிறது. மத்திய, மாநில அரசுகள், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து உற்பத்தி, உட்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில், 126 கூட்டு நிறுவனங்களை துவக்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !