உள்ளூர் செய்திகள்

எண்கள்

11,400

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் 11,400 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக பிரிட்டனை சேர்ந்த சிப் தயாரிப்பு நிறுவனமான கிராப்கோர் அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நைகன் டூன், 'பெங்களூரில் முதல் அலுவலகத்தை திறக்க உள்ளோம். இதில், முதல்கட்டமாக 100 பொறியாளர்களை பணிக்கு அமர்த்த உள்ளோம்' எனவும், அடுத்த 2 ஆண்டுகளில் பணியாளர்கள் எண்ணிக்கையை 500 ஆக அதிகரிக்க உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

8,800

இ ந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவும் வகையில், இன்னோவேஷன் பேங்கிங் தளத்தை, எச்.எஸ்.பி.சி., வங்கி துவங்கி உள்ளது. ஏற்கனவே, அமெரிக்கா, பிரிட் டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்த பேங்கிங் சேவையை அளித்து வரும் எச்.எஸ்.பி.சி., இந்தியாவில் 8,800 கோடி ரூபாய் வரை கடனாக வழங்க திட்டமிட்டு உள்ளது. இந்த தளத்தில், தொழில்முனைவோர்கள், பங்குகள் அல்லது நிறுவனத்தின் கட்டுப்பாட்டை வங்கிக்கு அளிக்காமல், கடனை பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை