ஒரு கேள்வி ஒரு பதில்
பணப்புழக்க நெருக்கடியை சிறு நிறுவனங்கள் எப்படிச் சமாளிக்கலாம்?
பதில்: சிறு நிறுவனங்கள் விற்பனை செய்த பொருட்களுக்கு கிடைக்க வேண்டிய தொகை தாமதமாகும் போது, ‘டிரெட்ஸ்’ வசதியை பயன்படுத்தி அந்த பணத்தை முன்கூட்டியே பெறலாம். வாங்குபவர் ஒப்புதல் அளித்த பில்களை அடிப்படையாக கொண்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் முன்பணம் வழங்குவதால், தினசரி செலவுகள் மற்றும் தொழில் செயல்பாடுகளுக்கான பணப்புழக்கம் சீராகும். இதன் வாயிலாக, நிலுவை தொகைக்காக நீண்ட நாட்கள் காத்திருக்காமல், மூலப்பொருள் வாங்குதல், ஊதியம் உள்ளிட்ட அன்றாட செலவுகளுக்கு தேவையான நிதியை தொடர்ந்து வைத்திருக்க முடியும். — பரத் கேரா, செயலர், மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகம்