உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  வெங்காயம் விலை 9 சதவீதம் குறைந்தது

 வெங்காயம் விலை 9 சதவீதம் குறைந்தது

புதுடில்லி: வெங்காயம் விலை கடந்த 9 நாட்களில் 9 சதவீதம் சரிந்துள்ளதாக மத்திய நுகர்வோர் விவகார துறை செயலர் நிதி காரே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: நாடு முழுதும் வெங்காயத்தின் சில்லரை விலை சராசரியாக 53.92 ரூபாயாக உயர்ந்தது. இது கடந்த மாதத்தை விட 48 சதவீதமும், கடந்தாண்டை விட 94 சதவீதமும் அதிகம். வெங்காயத்தின் விலையை குறைக்க, கிலோ 35 ரூபாய்க்கு அரசு கூட்டுறவு அமைப்புகள் வாயிலாக நாடு முழுதும் 48 நகரங்களில் விற்பனை செய்யப்பட்டது. இதன் காரணமாக மொத்த வெங்காய விலை குறைந்து, சில்லரை விலையில் அதன் தாக்கம் காணப்படுகிறது. கடந்த 9 நாட்களில் 9 சதவீதம் விலை குறைந்துள்ளது. அரசு கிடங்குகளில் தற்போது 1.21 லட்சம் டன் வெங்காயம் இருப்பு உள்ளது. மொத்த விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை