பயணியர் கார் விற்பனை 17 சதவீதம் அதிகரிப்பு
புதுடில்லி, :கடந்த மாதத்தில், பயணியர் கார் விற்பனை 17 சதவீதம் உயர்ந்து, 4.60 லட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, நடப்பாண்டில் பெற்ற அதிகபட்ச விற்பனை வளர்ச்சியாகும். கடந்த அக்டோபர் மாத வாகன விற்பனை மற்றும் உற்பத்தி அறிக்கையை, இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்டுள்ளது. வாகன உற்பத்தி 2.8 சதவீதம் குறைந்தும், விற்பனை 4.1 சதவீதம் அதிகரித்தும் இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. வாகன வகை அக் 2025 அக் 2024 வளர்ச்சி (%) இருசக்கர வாகனம் 22,10,727 21,64,276 2.1 மூன்று சக்கர வாகனம் 81,288 76,770 5.9 பயணியர் கார் 4,60,739 3,93,238 17.2 மொத்தம் 25,86,157 26,91,620 4.1பண்டிகை கால தேவை, புதிய ஜி.எஸ்.டி., அமல் ஆகியவை விற்பனை அதிகரிப்புக்கு முக்கிய காரணங்கள். வாகன வினியோக போக்குவரத்தில் சில தடங்கல் ஏற்பட்டு இருந்தாலும், விற்பனை மிக அதிகமாக இருந்தது. ஜி.எஸ்.டி., குறைப்பிற்கு பின்பு கடந்த அக்டோபரில் வாகன பதிவுகள் அலை மோதின. கடந்த மாத வாகன உற்பத்தியை விட, வாகன பதிவுக்கு வந்த வாகனங்கள் அதிகம். - ராஜேஷ் மேனன், பொது இயக்குநர், இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம்