எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின் வாராக்கடன் அதிகரிக்க வாய்ப்பு
புதுடில்லி:இந்திய பொருட்கள் இறக்குமதி மீதான அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால், நடப்பாண்டில், நாட்டின் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள், குறிப்பாக ஏற்றுமதியை சார்ந்த நிறுவனங்களின் வாராக்கடன் அதிகரிக்கக் கூடும் என கிரிசில் ரேட்டிங்க்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில், அமெரிக்காவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 16.30 சதவீதம் சரிந்துள்ளது. வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள இந்த சரிவு, ஏற்றுமதி சார்ந்த எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின் நிதிச் சுமையை அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக, எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின் வாராக்கடன் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த 2021 மார்ச்சில் 8.70 சதவீதமாக இருந்த வாராக்கடன் விகிதம், கடந்த மார்ச்சில் 3.60 சதவீதமாக குறைந்துள்ளது. இதற்கு அரசின் கொள்கை ஆதரவே முக்கிய காரணமாகும். எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களின் வாராக்கடன் காலம் மொத்த வாராக்கடன் (%) மார்ச் 2020 11.00 மார்ச் 2021 8.70 மார்ச் 2024 4.00 மார்ச் 2025 3.60 மார்ச் 2026* 3.90 * கணிப்பு