கேள்வி – பதில்
கேள்வி: உற்பத்தி திறனை விரிவுபடுத்தும் முன் நிறுவனங்கள் எந்த அம்சங்களை கவனிக்க வேண்டும்?
பதில்:
முதலில் சந்தையில் உண்மையான தேவை இருக்கிறதா என்பதை மதிப்பிட வேண்டும். புதிய தொழிற்சாலை அமைக்க நேரம் எடுக்கும் நிலையில், உடனடி தேவையை பூர்த்தி செய்ய ஏற்கனவே உள்ள ஆலையின் திறனை விரிவுபடுத்தலாம். புதிய ஆலை செயல்பாட்டுக்கு வர எடுக்கும் காலத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். அது செயல்பாட்டுக்கு வந்த பிறகு, ஏற்கனவே உள்ள உற்பத்தி நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைத்து திறனை பயன்படுத்தலாம். கவுதம் சிங்கானியா
நிர்வாக இயக்குனர், ரேமண்ட் குழுமம்