உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது /  சேவைத்துறை வளர்ச்சி உயர்வு

 சேவைத்துறை வளர்ச்சி உயர்வு

புதுடில்லி: நாட்டின் சேவைத்துறை வளர்ச்சி, கடந்த ஏப்ரல் மாதத்தில் ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக ஹெச்.எஸ்.பி.சி., வங்கியின் பி.எம்.ஐ., அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கையின் விபரம்: கடந்த மார்ச் மாதத்தில் 57.50 புள்ளிகளாக இருந்த சேவைத்துறைக்கான பி.எம்.ஐ., குறியீடு, ஏப்ரல் மாதத்தில் 58.80 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இது கடந்த நவம்பர் மாதத்திற்கு பின் பதிவான மிக அதிக வளர்ச்சியாகும். குறைவான விலை, இ - காமர்ஸ் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் சேவைகளுக்கான அபரிமிதமான தேவை ஆகியவற்றால் விற்பனை வளர்ச்சி அதிகரித்துள்ளது. எனினும், மேற்காசிய போர் மற்றும் சுற்றுலா பயணியர் வருகை குறைவு போன்ற காரணங்களால் வெளிநாடுகளில் இருந்து வரும் புதிய ஏற்றுமதி ஆர்டர்கள் முந்தைய மாதங்களை விட குறைந்துள்ளன. இதனிடையே, தயாரிப்பு மற்றும் சேவைத்துறைகளை உள்ளடக்கிய கூட்டு பி.எம்.ஐ., குறியீடு, கடந்த மாதம் 58.20 புள்ளிகளாக அதிகரித்துள்ளது. இது முந்தைய மார்ச் மாதத்தில் 57 புள்ளிகளாக இருந்தது. மாதம் வளர்ச்சி புள்ளிகள் 2025 ஏப்ரல் 58.70 மே 58.80 ஜூன் 60.40 ஜூலை 60.50 ஆகஸ்ட் 62.90 செப்டம்பர் 60.90 அக்டோபர் 58.90 நவம்பர் 59.80 டிசம்பர் 58.00 2026 ஜனவரி 58.50 பிப்ரவரி 58.10 மார்ச் 57.50 ஏப்ரல் 58.80


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை