உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் முடங்கிய யு.பி.ஐ., சேவை பயனர்கள் கடும் அவதி

தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் முடங்கிய யு.பி.ஐ., சேவை பயனர்கள் கடும் அவதி

புதுடில்லி:ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைக்கான யு.பி.ஐ., சேவைகள், நேற்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக திடீரென முடங்கியதால், பயனர்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.நாடு முழுதும் தற்போது 35 கோடிக்கும் அதிகமானோர் யு.பி.ஐ., சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர்.

திடீர் முடக்கம்

இந்நிலையில், நேற்று காலை 11.26 மணி முதல் டிஜிட்டல் பேமண்ட் செயலிகளான கூகுள்பே, போன்பே மற்றும் பேடிஎம் செயலிகளில் வணிக ரீதியான மற்றும் தனிப்பட்ட பரிவர்த்தனைகள் திடீரென முடங்கின. இதனால், பணம் அனுப்பவோ, பெறவோ முடியாமல் பயனர்கள் தவிப்புக்கு ஆளாகினர். பிற்பகல் வரை யு.பி.ஐ., சேவைகள் முடக்கம் தொடர்பாக 2,000க்கும் மேற்பட்ட புகார்கள் வந்தன. மேலும், யு.பி.ஐ., சேவை வழங்குநர்களான எச்.டி.எப்.சி., வங்கி, எஸ்.பி.ஐ., மற்றும் கோடக் மஹிந்திரா வங்கியின் சேவைகளும் பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.

வருத்தம்

இது குறித்து என்.பி.சி.ஐ.,வெளியிட்ட விளக்கத்தில் தெரிவித்ததாவது:தற்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பகுதியாக யு.பி.ஐ., பரிவர்த்தனை சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. இதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இது குறித்து, விரைவில் அப்டேட் செய்யப்படும். இதனால், பயனர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம். இவ்வாறு தெரிவித்து இருந்தது.

*மார்ச் 26ம் தேதி : இந்தியா முழுதும் யு.பி.ஐ., சேவையில் பரவலான பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பணப்பரிவர்த்தனைகள் தடைபட்டன. ஒரு மணி நேரத்துக்கு பிறகு பிரச்னை சரிசெய்யப்பட்டது.

ஏப்ரல் 2: பல்வேறு பனப்பரிவர்த்தனை தளங்களில் பாதிப்புகள் ஏற்பட்டது.தொழில்நுட்ப கோளாறு காரணமாக பரிவர்த்தனைகளில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டதுஏப்ரல் 12: இந்தியா முழுதிலிருந்தும் பாதிப்புகள் குறித்து புகார்கள் பெறப்பட்டன. பணம் செலுத்துவதில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறு என காரணம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை